உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவும் மெல்ல பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. நேற்று வரை 166 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில்,கொரோனாவால் இன்று மட்டும் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்தம் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிறது.
இதனிடையே, இத்தாலியை சேர்ந்த 69 வயது முதியவர் ஒருவர் ராஜஸ்தானில் கொரோனா பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து முதல்வர் கூறியுள்ளதாவது :
அரசுப் போக்குவரத்து கழகங்களின் பேருந்துகள் வரும் 22 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஓடாது என தெரிவித்துள்ளார்.
மேலும், வரும் ஞாயிறன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு பேருந்துகள் இயங்காது. தனியார் பேருந்துகள் இயங்கக் கூடாது. எனவே வரும் ஞாயிறன்று ,பிரதமர் மோடி கூறியுள்ளபடி, மக்கள் அனைவரும் ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.