கொரோனாவால் 32 பேர் மரணம்: அவசரநிலை பிறப்பித்த இந்தோனேஷியா!

வெள்ளி, 20 மார்ச் 2020 (18:53 IST)
அவசரநிலை பிறப்பித்த இந்தோனேஷியா
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையை பல நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றனர் 
 
குறிப்பாக சீனாவை அடுத்து இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் உயிரிழப்புகள் மிக அதிகம் இருப்பதால் அந்நாடுகளில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவிலும் கொரோனா வைரஸின் ஆட்டம் ஆரம்பமாகியுள்ளது. கொரோனா வைரசால் இந்தோனேஷியா நாட்டில் 369 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிகிச்சை பெற்றவர்களில் 32 பேர் மரணமடைந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகிஉள்ளது
 
கொரோனா  வைரஸினால் மரண எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து இந்தோனேசியா நாட்டின் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் இரண்டு வார காலத்திற்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் யாரும் வீதிக்கு வர கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
 
கொரோனா வைரசுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் ஒரே வழி மக்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைக்க வேண்டும் என்பது தான் அனைத்து நாடுகளும் செய்துவரும் முதல் கட்ட நடவடிக்கையாக உள்ளது. இந்தியாவிலும் இதே நடவடிக்கை தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்