தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம்..!
திங்கள், 16 அக்டோபர் 2023 (13:25 IST)
தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்ற ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக இன்று கரூர் திண்டுக்கல் உள்பட ஒரு சில மாவட்டங்களில் கன மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.