கனமழை எதிரொலி.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

திங்கள், 16 அக்டோபர் 2023 (07:54 IST)
கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர் கன மழை பெய்து வருவதை அடுத்து சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. 
 
இதன் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை என அம்மாவட்ட ஆட்சித் தலைவர்  உத்தரவு பிறப்பித்துள்ளார்  
 
மேலும் மழை காரணமாக தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்