தமிழுக்கு பெருமைசேர்த்த பிரதமருக்கு நன்றி: ஓபிஎஸ் டுவீட்

ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (18:09 IST)
பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வருகை தந்தார் என்பதும் சுமார் 8000 கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைத்தார் என்பதும் தெரிந்ததே. மேலும் இன்று அவர் அரசு நிகழ்ச்சியில் பேசிய போது தமிழில் ஔவையார், மற்றும் பாரதியாரின் பாடல்களை மேற்கோள் காட்டி பேசியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது 
 
இந்த நிலையில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஔவையார், பாரதியாரின் பாடல்களை மேற்கோள் காட்டிய பிரதமருக்கு நன்றி என ட்வீட் செய்துள்ளார். அவர் பதிவு செய்துள்ள ட்ரீட் இதோ:
 
தனது உரையில் ஔவையார், பாரதியாரின் பாடல்களை மேற்கோள்காட்டி தமிழுக்கு பெருமைசேர்த்த மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பாக எனது உளமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
 

தனது உரையில் ஔவையார்,பாரதியாரின் பாடல்களை மேற்கோள்காட்டி தமிழுக்கு பெருமைசேர்த்த மாண்புமிகு பிரதமர் @PMOIndia அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பாக எனது உளமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

— O Panneerselvam (@OfficeOfOPS) February 14, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்