ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஓட்டம்: பொதுக்கூட்டம் நடத்த மறுப்பு!

Webdunia
வியாழன், 1 ஜூன் 2017 (10:41 IST)
அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வெளியே வந்த ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தொண்டர்கள் மற்றும் மக்களின் ஆதரவை பெற சுற்றுப்பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.


 
 
மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக பொதுக்கூட்டம் நடத்தி தொண்டர்களை சந்திக்க திட்டமிட்ட ஓபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கினார். இந்த சுற்றுப்பயணத்தின் நான்காவது பொதுக்கூட்டம் கடலூரில் நடைபெறுவதாக இருந்தது.
 
ஆனால் ஓபிஎஸுக்கு தற்போது ஆதரவு குறைந்து வருவதாலும், இரு அணிகளும் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாலும் கடலூரில் பொதுக்கூட்டத்தை நடத்த நியமிக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன் முன்வரவில்லை. கடலூரில் தற்போது இடமில்லை, வேறு மாவட்டத்தில் நடத்துங்கள் என கூறியதாக தகவல்கள் வருகின்றன.
 
இதனையடுத்து உடனடியாக நாகப்பட்டினம் பொறுப்பாளரை அழைத்து பொதுக்கூட்டம் நடத்த கூறி அதனை நடத்தி முடித்துவிட்டனர். ஆனாலும் அடுத்த பொதுக்கூட்டத்தை நடத்த எந்த மாவட்ட பொறுப்பாளர்களும் முன்வரவில்லை. ஓபிஎஸ் அணியினரின் ஆர்வம் குறைவதற்கு காரணம் தற்போது ஓபிஎஸ்-க்கு செல்வாக்கு குறைந்து வருவதாலும், இரு அணிகளும் ஜூலையில் இணைந்துவிடும் என்பதாலுமே என கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்