அதிமுகவில் ஓ.பி.எஸ் அணி மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணி என இரு அணிகள் செயல்படுகிறது. இரு அணிகளும் இணைவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனாலும், சில கோரிக்கைகளில் ஓ.பி.எஸ் அணி உறுதியாக இருப்பதால், இதுவரை பேச்சுவார்த்தை கூட நடைபெறவில்லை.
மேலும், சமீபத்தில் தேனி மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய அவர் “ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளரை நாங்கள் ஆதரித்துள்ளோம். ஜெயலலிதா உயிரோடு இருந்தாலும் இந்த முடிவைத்தான் எடுத்திருப்பார். அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கு இனி வாய்ப்பே இல்லை” என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.