போலீசுக்கு உத்தரவிட்டது யார்? கொந்தளிந்த ஓபிஎஸ்? - இனி நம்பமாட்டோம்

புதன், 25 ஜனவரி 2017 (17:26 IST)
மெரீனாவில் காவல்துறையினர் நடத்திய கோடூர தாக்குதலுக்கு தமிழக முதல்வர் கடும் அதிருப்தி அடைந்ததாகவும், கோட்டையில் கொந்தளித்ததாகவும் தகவல் பரவுகிறது. இனி ஓபிஎஸ் பற்றி இந்த செய்தியை நாங்கள் நம்ப மாட்டோம் என்று சமூக வலைத்தளத்தில் கருத்து பரவி வருகிறது.


 

 
மேரீனாவில் காவல் துறையினர் நடத்திய கொடூரமான தாக்குதலுக்கு தமிழக முதலவர் ஓ. பன்னீர்செல்வம் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் தலைமை செயலகத்தில், இப்படி கொடூரமான தாக்குதல் நடத்த போலீசுக்கு யார் உத்தரவு போட்டது? என கொந்தளித்தார் என்று தகவல்கள் பரவுகிறது.
 
இதற்கு சமூக வலைத்தளத்தில் அனைவரும் இனி நாங்கள் நம்ப மாட்டோம் இந்த கட்டுக்கதைகளை என்று பதவிட்டு வருகின்றனர். முதலில் ஓபிஎஸ் சசிகலா எதிராக குரல் கொடுத்தார் என்றும், அதற்கு சசிகலா தர்ப்பு அதிர்ச்சியில் உள்ளது என்றும் தகவல்கள் பரவியது. இதையடுத்து சிறிது நாடகள் கழித்து ஓபிஎஸ் சசிகலா காலில் விழும் சம்பவம் அரங்கேறியது.
 
தற்போது ஓபிஎஸ் கொந்தளித்தார் என்று பரவு வருகிறது. இதனால் இந்த கட்டுக்கதைகளை நாங்கள் நம்ப தயாராக இல்லை. ஆளும் கட்சி தான் முடிவு செய்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்