பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்-டிடிவி தினகரன் அணி? அண்ணாமலை விளக்கம்..!

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (07:42 IST)
தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இருந்தாலும் பாஜகவின் கூட்டணியில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் அணி இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
அதிமுகவிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகுதியை பெரும் பாஜக அதிலிருந்து சில தொகுதிகளை ஓபிஎஸ் டிடிவி தினகரன் அணிக்கு கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
 
இந்த நிலையில் நேற்று பேட்டியளித்த அண்ணாமலை கூட்டணிக்குள் யார் வந்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம் என்றும் கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஒரே ஒரு நிபந்தனை தான் அவர்கள் பிரதமர் மோடியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். 
 
நாடு ஒற்றுமையாக இருப்பதை ஏற்க வேண்டும் என்றால் கூட்டணி கண்டிப்பாக தேவை என்றும் எனவே எங்களை நம்பி வரும் கூட்டணி கட்சிக்காக எங்களுடைய கதவு திறந்து தான் இருக்கிறது என்றும் தெரிவித்தார். 
 
இதனை அடுத்து பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் - டிடிவி தினகரன்  அணி இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்