தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!

Senthil Velan

ஞாயிறு, 26 மே 2024 (10:56 IST)
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் நாளன்று மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் நடத்த உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜுன் 6 ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள் செய்திக்குறிப்பில், “2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜுன் 6 ஆம் தேதி (06.06.2024) அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகளை திறக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி பள்ளி வகுப்பறை, ஆசிரியர்கள் அறை, தலைமை ஆசிரியர் அறை என அனைத்தும் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் மழை நீர் கால்வாய்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேற்கூரைகளில் குப்பை இல்லாததை உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளி வளாகம் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி திறந்த அன்று ஒன்றாம் வகுப்பில் மாணவர்கள் முழுமையாக சேர்ந்ததை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

ALSO READ: திருநீறு இல்லாமல் வள்ளலார் படம்..! அடையாளத்தை அழிக்கும் திமுக..! தமிழக பாஜக கண்டனம்..!!
 
பள்ளி திறக்கும் நாளன்று மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் நடத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்