ஊட்டி ஆளுனர் மாளிகையை கையகப்படுத்த வேண்டும்: திருமாவளவன் எம்.பி.,

செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (07:45 IST)
ஊட்டியிலிருக்கும் ஆளுநர் மாளிகையை அரசு கையகப்படுத்தி அதை வேறு பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என திருமாவளவன் எம்.பி., கூறியுள்ளார்.
 
பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழ்நாடு அரசுக்கே வழங்கக்கூடிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மசோதாவைத் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றி இருக்கும் தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் திருமாவளவன் எம்.பி., கூறியுள்ளார்.
 
 ஏற்கனவே சென்னை கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையை அரசு கையகப்படுத்தி வேறு பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் அமைச்சர்கள் தங்கும் வீடுகளில் ஒன்றில் கவர்னரை தங்க வைக்க வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் எம்எல்ஏ கூறிவரும் நிலையில் தற்போது ஊட்டியில் இருக்கும் கவர்னர் மாளிகையையும் அரசு கையகப்படுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்