தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நாளை தொடக்கம்: ஜூன் 14 வரை தடை இருக்கும் என அறிவிப்பு..!

வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (12:54 IST)
தமிழகத்தில் மீன் பிடி தடைக்காலம் நாளை முறை தொடங்குவதாகவும் அது ஜூன் 14 வரை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மே ஜூன் மாதங்களில் மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மத்திய மின்வளத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி இந்த மூன்று மாதங்களுக்கும் ஆழ்கடலில் சென்று விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். 
 
அந்த வகையில் நாளை முதல் அதாவது ஏப்ரல் 15 முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகின்றது என்றும் இது ஜூன் 14 வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
எனவே இந்த மீன்பிடி தடை காலமான 61 நாட்களில் விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்க கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்