நீச்சல் குளங்களில் 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் குளிக்க தடை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சனி, 15 ஏப்ரல் 2023 (10:34 IST)
நீச்சல் குளத்தில் எட்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் குளிக்க தடை விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
சமீபத்தில் நீச்சல் குளத்தில் பயிற்சியாளர் கவன குறைவாக இருந்ததால் சிறுவன் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து நீச்சல் குளத்தில் குளிப்பதற்கான சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. 
 
குறிப்பாக எட்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் நீச்சல் குளத்தில் குளிக்க மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.  மேலும் குழந்தைகள் குளிக்கும் போது பெற்றோர் உடன் இருக்க வேண்டும் என்றும் செல்ல பிராணிகளை நீச்சல் குளத்திற்குள் அழைத்து வரக்கூடாது என்றும் அனைத்து நீச்சல் குளத்திலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்றும் மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
பயிற்சியாளர் நீச்சலில் திறன் பெற்றவராக இருக்க வேண்டும் என்றும் பல்வேறு நிபந்தனைகளை மாநகராட்சி விதித்துள்ளது. இந்த விதிகள் குறித்து மாநகராட்சி இடம் அனுமதி பெற்ற அனைத்து நீச்சல் குளங்களை பராமரிப்பவர்களுக்கும் அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்