ஸ்டாங்காகும் சாத்தான்குளம் கேஸ்; மேலும் ஒரு காவலர் அப்ரூவர்!

வியாழன், 2 ஜூலை 2020 (10:44 IST)
தந்தை - மகன் கொலை வழக்கில் சாத்தான்குளம் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை அப்ரூவராகிறார் என தகவல். 
 
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி கையில் எடுத்துள்ளது. 
 
இந்த வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது செய்யப்ட்டார். இதையடுத்து எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ் தலைமறைவாக இருந்தனர். இவர்களை தீவிரமாக தேடிவந்த சிபிசிஐடி போலீசார் நள்ளிரவில் இவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
 
அதோடு சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் சாத்தான்குளம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை சிபிசிஐடி சாட்சியாகிறார் என சிபிசிஐடி தெரிவித்துள்ளனர்.  
 
ஏற்கனவே காவலர் ரேவதி காவல்துறைக்கு எதிராக சாட்சி அளித்த நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரையும் சாட்சியாக மாறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்