போலீஸாருக்கு வாரம் ஒருநாள் விடுமுறை

சனி, 31 ஜூலை 2021 (19:28 IST)
காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் இனிமேல் விடுமுறை அளிக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது போலீஸார் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினருக்கு விடுமுறை என்பது இல்லாததால் அவர்கள் மனவிரக்தி, சோர்வு,  அடைந்துள்ளனர். இதனால் காவல்துறையினருக்கு வாரம் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, காவலர்களின் கோரிக்கையைப் பரிசீலித்து அவர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை அளித்து  உத்தரவிட்டுள்ளது.

தமிழகக் காவல்துறை டிஜிபியாக சைலேந்தர் பாபு ஐபிஎஸ் சமீபத்தில் பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பை தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்