கொரோனா விதிகளை காற்றில் பறக்கவிட்ட அதிமுகவினர் மீது போலீசார் வழக்கு!

வியாழன், 29 ஜூலை 2021 (09:41 IST)
கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

 
தமிழகத்தில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சியமைத்த நிலையில் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என அதிமுக கண்டனம் தெரிவித்தது. திமுகவை கண்டித்தும், மக்களுக்கு வாக்குறுதிகளை நிறைவேற்றவும் வலியுறுத்தி நேற்று அதிமுக தமிழக அளவில் போராட்டத்தில் ஈடுபட்டது.  
 
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை எதிர்கட்சி தலைவர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பலர் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் திமுகவுக்கு கண்டனம் தெரிவித்து பதாதைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். 
 
இந்நிலையில் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 37 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இதில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்