ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிக்கு ரூ.1 கோடி இழப்பீடா?

Webdunia
புதன், 26 டிசம்பர் 2018 (18:39 IST)
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் சமீபத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவருக்கு தவறுதலாக ஹெச்.ஐ.வி பாதித்த ரத்தத்தை ஏற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் ஏற்றிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, அவருக்கு உயர் சிகிச்சை அளிக்கவும், நஷ்ட ஈடு வழங்கவும், அவரது தகுதிக்கு ஏற்ற அரசு வேலை வழங்கவும் முடிவு செய்துள்ளதாக சுகாதாரத்துறை சமாதானம் செய்து வருகிறது. இருப்பினும் இந்த விவகாரம் ஊடகங்களில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த நிலையில் ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்துவதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. ஒரு கோடி ரூபாய் சாத்தியம் இல்லை என்றாலும் ஒரு பெரிய தொகை கர்ப்பிணி பெண்ணுக்கு நஷ்ட ஈடாக வழங்கப்படும் என்றே கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்