ஆம்னி பேருந்துகளுக்கு இன்றே கடைசி நாள்..! அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை..!!

Senthil Velan

புதன், 24 ஜனவரி 2024 (11:17 IST)
சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க இன்றே கடைசி நாள் என்று அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 
சென்னையில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இந்த கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது.
 
இந்நிலையில்  செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சேகர்பாபு, இன்று முதல் கோயம்பேட்டிற்கு பதிலாக கிளாம்பக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்றார். கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க இன்றே கடைசி நாள் என தெரிவித்த அவர், கோயம்பேட்டில் இன்றுடன் ஆம்னி பேருந்துகள் முழுமையாக தடை செய்யப்படும் என்று கூறியுள்ளார். ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்காக அரசு செயல்பட முடியாது என்று அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை வைத்து இன, மத பிரச்சனைகளை ஏற்படுத்தி தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைத்து கலவரத்தை உண்டாக்க நினைத்தவர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள் என்று  அவர் தெரிவித்தார். 
 
மத்திய அரசு மத இன ரீதியான குற்றச்சாட்டுகளை தமிழக அரசு மீது சுமத்த பார்க்கிறது என்றும் உரிய அனுமதி பெறாமல் கோயில்களில் குண்டர்கள் போல எல்இடி திரைகளை அமைத்து பதற்ற நிலையை ஏற்படுத்தினார்கள் என்றும் அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்