நாடு முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்தியாவில் வரும் பிப்ரவரி மாதம் ஒமிக்ரான் 3-வது அலை ஏற்படலாம் என்றும் தினமும் இதனால் 1.5 லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூடி ஆன்லைன் வாயிலாகப் பாடங்கள் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.
இதுகுறித்து விரைவில் பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.