லெட்டர் பேடாக மாறும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள்!

வெள்ளி, 5 ஜனவரி 2018 (18:01 IST)
பிரதமர் மோடி கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தார். பின்னர், புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியாகின. 
 
கடந்த ஜூன் மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி, 99% மதிப்பு நீக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுவிட்டனவாம். மேலும், பல முறைகளில் பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டது. இந்நிலையில், பண மதிப்பழிப்பு நடவடிக்கையால் மதிப்பு இழந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை லெட்டர் பேடுகளாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 
 
அதன்படி, ரூபாய் நோட்டுகளை அரைத்து காகித கூழாக்கி லெட்டர் பேட் தயாரிக்க நாடு முழுவதும் உள்ள சிறைகளுக்கு அனுப்பி, கைதிகளை கொண்டு லெட்டர் பேடு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்ரு வருகிறது. தயாரிக்கப்படும் லெட்டர் பேடுகள் அனைத்தும் அரசு துறைகளுக்குள்ளேயே விற்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்