பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 எண்ணெய் நிறுவனங்கள் குறைக்க வேண்டும்- ராமதாஸ்

Webdunia
ஞாயிறு, 8 ஜனவரி 2023 (12:40 IST)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருகிறது. ரஷ்யாவிடமிருந்து 30 சதவீதம் சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்கிய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்ற்னர்.

இதன் காரணமாக சென்னையில் கடந்த 232 நாட்களாக பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றமில்லை.

இந்த நிலையில், பெட்ரோல் விற்பனையில் கிடைக்கும் கூடுதல் லாபத்தை மக்களுக்கு வழங்கும் வகையில்  பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதன் காரணமாக பெட்ரோல் விற்பனையில் எண்னெய் நிறுவனங்களுக்கு ரூ.10 கூடுதல் லாபம் கிடைக்கிறது.

ஆனாலும், சில்லறை விற்பனை விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வராதது  கண்டிக்கத்தக்கது கடந்த நவம்பர் மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.6 லாபம் கிடைக்க நிலையில், பெட்ரோல், டீசல் ஆகிய இரண்டின் விலைகளையும் லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.

 ஆனால், திடீரென அம்முடிவு கைவிடப்பட்டதன் காரணம் புரியவில்லை மக்களை வருத்தி எண்ணெய் நிறுவனங்கள் லாபம் ஈட்டக் கூடாது. பெட்ரோல் விற்பனையில் கிடைக்கும் கூடுதல் லாபத்தை மக்களுக்கு வழங்கும் வகையில்  பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும்!’’என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்