அமமுகவில் இருந்து நீக்கப்பட உள்ள தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.
டிடிவி தினகரன் மற்றும் அமமுக கட்சியை தரக்குறைவாக விமர்சித்த காரணத்தினால், தங்க தமிழ்செல்வனை கட்சியில் இருந்தும், கட்சி பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக டிடிவி தினகரன் கூறினார்.
இந்நிலையில் அமமுகவில் இருந்து தங்க தமிழ்செல்வன் நீக்கப்பட்டதும் அதிமுகவில் இணைவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட் நிலையில், தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முட்டுக்கட்டை போட்டுள்ளதாக தெரிகிறது.
அதாவது, தேனியில் என்னை எதிர்க்கும் விதத்தில் என் மகனை எதிர்த்தாககவும், நான் பாஜக்வில் இணைய போவதாகவும், பதவி ஆசையில் பாஜாவிடம் அடிபணிந்ததாகவும் என்னை பற்றி அவதூறு பேசிய தங்க தமிழ்செல்வனை அதிமுகவில் இணைத்துக்கொள்ள கூடாது என தெரிவித்ததாக தெரிகிறது.