அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதில், கழகத்தின் கொள்கை கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால், கழகத்தின் சட்டதிட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறையை குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில், இதற்குப் பதிலடி தரும் வகையில் இன்று ஓ.பன்னீர் செல்வம், இபிஎஸ் ஆதரவாளர்களான ஜெயக்குமார், பொள்ளாட்சி ஜெயராமன் உள்ளிட்ட 44 பேரை கட்சியில் இருந்து நீக்கினார்.
இதுபற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: அதிமுகவில் இருந்து ஒருவரை நீக்கும் அதிகாரம் இடைக்காலப் பொதுச்செயலாளர் பழனிசாமிக்குத்தான் உள்ளது. எங்களைக் கட்சியை விட்டு பன்னீர்செல்வம் நீக்கியதை காமெடியாகப் பார்க்கிறென். அவர் அதிமுகவில் உள்ளை . ,மற்ற கட்சிடியில் இணையலாம் எனத் தெரிவித்துள்ளார்.