தனுஷ், ஐஸ்வர்யா கோர்டில் நேரில் ஆஜராக விலக்கு - நீதிமன்றம் உத்தரவு

வியாழன், 14 ஜூலை 2022 (17:13 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவிக்கு கோர்டில் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ். இவரது மனைவி ஐஸ்வர்ய . இவர்கள் இருவரும் இயக்குனராக இருந்து, வொண்டர்பார் நிறுவனம் தயாரித்த படம்  வேலையில்லா பட்டதாரி. இப்படம் சில ஆன்டுகளுக்கு முன் வெளியான நிலையில் இப்படத்தின் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சி இடம்பிடித்திருந்தது. ஆனால், திரையில் புகைப்பிடிப்பது  உடல்  நலத்திற்குக் கேடு என்ற வாசகம் இடம்பெறவில்லை.

இந்த நிலையில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேசுக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை 18 வது கோர்டில் தமிழ் நாடு சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் மருத்துவர் வி.ககே. பழனி வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில்    தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா நாளை கோர்டில் ஆஜராகவேன்டும் என கோர்டு சம்மன் அனுப்பியது.

இதற்கு எதிராக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தனயாக வழக்கு தொடர்ந்து, நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.இதனையடுத்து, நீதிமன்றம் இருவருக்கும்   நேரில் ஆஜரக விலக்கு அளித்துள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு பதிலக்க வேண்டும் என்று நோட்டிஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்