ஜல்லிக்கட்டு உறுதியாக நடைப்பெறும்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

Webdunia
புதன், 11 ஜனவரி 2017 (12:43 IST)
தமிழக முதலமைச்சர் ஜல்லிக்கட்டு உறுதியாக நடைப்பெறும் என்று குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 

 


தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று மாநிலம் முழுவதும், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிமுக நிர்வாகிகள் பிரதமரை நேரில் சென்று சந்தித்து ஜல்லிக்கட்டு தொடர்பாக கொரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
 
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஜல்லிக்கட்டு உறுதியாக நடைப்பெறும் என்று குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வெளியிட்டுளள அறிக்கையில்,
 
தமிழர்களின் பண்டைய பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு தமிழகத்தில் நடத்தப்படுவதற்கு ஏதுவாக மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பிக்க வேண்டுமென பிரதமருக்கு 9.1.2017 அன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளேன்.  இது பற்றி மத்திய அரசிடமிருந்து எந்தவித பதிலும் இதுவரை பெறப்படவில்லை.
 
9.1.2017 அன்று பிரதமருக்கு நான் அனுப்பிய கடிதத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் விதமாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன்.  ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்திடும்  வகையில்  7.1.2016 அன்று மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கை தொடர்பான வழக்கில்  உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ள தனது தீர்ப்பினை விரைவில் வழங்கும் என எதிர்பார்க்கிறேன். இந்த தீர்ப்பின் மூலம் தமிழகத்திற்கு நியாயம் கிடைக்கும் என உறுதியுடன் நம்புகிறேன்.
 
ஜல்லிக்கட்டு நடத்தும் முடிவில் தமிழக அரசு எள்ளளவும் பின்வாங்காது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நிச்சயம் உறுதிச்செய்வோம். தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் கட்டாயம் காக்கப்படும், என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்