ஒழுங்கீனமாக செயல்பட்டதாக கூறி செவிலியர்கள் பணியிடை நீக்கம் !

Webdunia
செவ்வாய், 11 ஜூன் 2019 (20:19 IST)
கடந்த ஐந்தாம் தேதி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் தங்கள் மீது கூடுதலான பணிச்சுமை சுமத்துவதாக கூறி இதற்கு காரணமான மருத்துவக்கல்லூரி டீனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 
இது தொடர்பாக கரூர் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி இரு தரப்பையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சுமுகமாக இந்த பிரச்சனையை முடித்து வைத்தார்.இருந்தபோதும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் இதுதொடர்பாக இன்று தமிழ்நாடு அரசு செவிலியர் சங்க கரூர் மாவட்டத் தலைவர் கார்த்தி செயலாளர் செல்வராணி பொருளாளர் தனலட்சுமி சங்கத்தின் மாநில துணை தலைவர் நல்லம்மாள் ஆகிய 4 பேரையும் பணி இடைநீக்கம் செய்து மருத்துவக் கல்லூரி டீன் ரோஸி வெண்ணிலா உத்தரவிட்டார்.
 
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செவிலியர் சங்கத்தின் சார்பில் 50 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மருத்துவக் கல்லூரி டீன் அலுவலகத்திற்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இன்னும் சிறிது நேரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் பின்னர் இது குறித்து  செவிலியர் சங்க மாநில துணை தலைவர் நன்னாம்மாள் கூறுகையில் மாவட்ட மருத்துவமனை நிர்வாக தலைமை அலுவலர் ரோஸிவெண்ணிலா தன்னிச்சையாக செயல்படுவதாகவும் தங்கள் தரப்பில் நியாம் இருந்தும் அதனை ஏற்க்க மறுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
 
மேலும் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை உடனடியாக பணியமற்த்தும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்