போலீசார் விசாரனையில் அக்கம்பக்கத்தினர் ஜெயஸ்ரீயை கடந்த வெள்ளிக்கிழமை பார்த்துள்ளனர். அப்போது ஜெயஸ்ரீ பால்கனியில் நின்றுள்ளார். அதன் பிறகு இரண்டு நாட்களாக அவரை யாரும் பார்க்கவில்லை. ஜெயஸ்ரீயின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்ததால் அக்கம்பக்கத்தினர் நேற்று போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது வீட்டின் கேட் வெளியே பூட்டியிருந்ததாகவும், ஆனால் கதவு பாதி திறந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சேலம் மாநகராட்சியில் வேலை செய்யும் அவரின் சகோதரர் செல்வராஜ் போலீசாரிடம் கூறியிருப்பதாவது, ஜெயஸ்ரீயின் வீட்டு பீரோவில் இருந்த 50 பவுன் தங்க நகைகளை காணவில்லை. ஆனால் அவர் அணிந்திருந்த கவரிங் நகைகள் அப்படியே உள்ளது என்று கூறியுள்ளார்.