வின்செண்ட் பார்க்கர் இறுதி ஊர்வல சேவை கம்பெனியின் பார்ட்னர் ஸ்டான்லி மைக்கேல் தான் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட அந்த பேழையை தயார் செய்துள்ளார். இவர்கள் தான் மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி, மறைந்த முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். ஆகியோரின் இறுதி சடங்கிற்கு பேழை தயார் செய்து கொடுத்தவர்கள்.
இந்நிலையில் காலை 3.30 மணிக்கு ஸ்டான்லி மைக்கேலை எழுப்பி முதல்வர் ஜெயலலிதா இறந்து விட்டார் அவருக்கு பெட்டி செய்ய வேண்டும் கூறியுள்ளனர் அதிகாரிகள். பொதுவாக ஒரு பெட்டி செய்ய மூன்று நாள் ஆகுமாம், ஆனால் சில மணி நேரங்களே இருந்தது ஜெயலலிதாவுக்கு பெட்டி செய்ய.
இதனால் 7, 8 பேர் சேர்ந்து ஏற்கனவே ரெடிமேடாக இருந்த ஒரு மரப்பெட்டியை எடுத்து தயார் செய்து 8 மணி நேரத்தில் பெட்டியை செய்திருக்கிறார்கள். அதனால் தான் அவர் இறந்த பின்னர் அவரது பெட்டியில் சந்தன கட்டைகள் போடப்பட்டன. இந்த தகவல் ஆங்கில ஊடகங்களில் வந்துள்ளன.