சென்னை மழை குறித்து நார்வே வானிலை மையம் தெரிவித்தது என்ன? 2015 திரும்புமா?

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2020 (15:09 IST)
சென்னையை நோக்கி நிவேர் என்ற புயல் வந்து கொண்டிருக்கும் நிலையில் வரும் 25ஆம் தேதி சென்னை மற்றும் புதுவை இடையே இந்த புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது நிவேர் புயல் கரையை கடக்கும் போது சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்நிலையில் நார்வே வானிலை மையம் சென்னை மழை குறித்த தகவலை தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று மாலை முதல் ஒரு வாரத்திற்கு லேசானது முதல் கனமழை பெய்யும் என்றும், நாளை மறுநாள் சென்னையில் மிக அதிக கனமழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது 
 
மேலும் 26ஆம் தேதி இரவும் வெள்ளிக்கிழமையும் சென்னையில் கனமழை பெய்யும் என்றும் 28ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை லேசான மழையும் ஆங்காங்கே கனமழை பெய்யும் என்றும் நார்வே மாநில வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் வெள்ளம் வந்த போதும் நார்வே வானிலை மையம் தான் முதலில் எச்சரித்தது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்