செம்பரம்பாக்கம் ஏரி திறப்பது குறித்து அமைச்சர் முக்கிய உத்தரவு

புதன், 10 நவம்பர் 2021 (11:32 IST)
செம்பரபாக்கம் ஏரி திறப்பது குறித்து பேரிடர் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்கள் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
சென்னை அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் தற்போது உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியை இரவு நேரத்தில் திறக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
கடந்து 2015ஆம் ஆண்டு இரவு நேரத்தில் திடீரென மிக அதிக அளவில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விட்டதால் இரவோடு இரவாக சென்னையை வெள்ளம் சூழ்ந்தது என்பதும் இதனால் பல உயிர்கள் பலியானது ஏகப்பட்ட பொருட்கள் நஷ்டம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதே நிலைமை மீண்டும் வரக் கூடாது என்பதற்காக இரவு நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியை திறக்கக்கூடாது என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்