அவசர கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரம் செயல்படும்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

திங்கள், 8 நவம்பர் 2021 (11:09 IST)
தமிழகத்தில் அவசர கட்டுப்பாட்டு மையம் இருபத்தி நான்கு மணிநேரமும் செயல்படும் என பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்
 
சென்னையில் நாற்பத்தி எட்டு முகாம்களில் இதுவரை 881 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் 5106 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார் 
 
மேலும் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நாளை திரும்ப உத்தரவிட்டுள்ளதாகவும் அவசர உதவிக்கு ஹெலிகாப்டர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
கடந்த 1ஆம் தேதி முதல் இன்று வரை 44 சதவீதம் அதிகமாக மழை பெய்து உள்ளது என்றும் தமிழ்நாட்டில் இதுவரை பெய்த மழையின் காரணமாக 4 பேர் உயிரிழப்பதாகவும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்