கைரேகை பதிவு செய்ய ரேசன் கடை அலைய வேண்டியதில்லை! – உணவுப்பொருள் வழங்கல் துறை புதிய உத்தரவு!

Prasanth Karthick

ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 (09:28 IST)
தமிழ்நாட்டில் உள்ள ரேசன் கடைகளில் உணவுப்பொருள்கள் பெற ஸ்மார்ட் ரேசன் கார்டில் குடும்ப நபர்கள் அனைவரது கைரேகையும் அவசியமாக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாட்டில் தமிழக அரசு உணவுப்பொருள் வழங்கல் துறை மூலமாக மக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை என பல உணவுப்பொருள்கள் ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னதாக ரேசன் கார்டுகள் அனைத்தும் ஸ்மார்ட்கார்டுகளாக மாற்றப்பட்டு உணவுப்பொருள் விநியோகம் எளிமைப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த மாத இறுதிக்குள் ஒவ்வொரு ரேசன் அட்டைக்கும் அந்த அட்டையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் கைரெகையை பதிவு செய்வது கட்டாயம் என்று கூறப்பட்டது. இதனால் பல்வேறு சர்ச்சைகளும், புகார்களும் எழுந்தன.

ALSO READ: கிளாம்பாக்கத்தில் இன்றும் பயணிகள் மீண்டும் போராட்டம். பேருந்துகளை சிறைப்பிடித்தால் பரபரப்பு..!

இந்நிலையில் இந்த செயல்பாடுகளை மக்களுக்கு இடர்பாடுகள் இல்லாமல் மேற்கொள்ள தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் துறை ரேசன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அதன்படி ரேசன் கடை ஊழியர்கள் கடைகளில் விற்பனை முடிந்த பின்னர் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று குடும்பத்தாரின் கைரேகை பதிவு செய்யும் பணிகளை முடிக்க வேண்டும் என்றும், இடையூறு ஏதுமில்லாமல் இந்த பணிகளை செய்து முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்