தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் நாய்கள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் வளர்ப்பு பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு சென்னை மாநகராட்சி புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
சமீபமாக வளர்ப்பு நாய்களை வெளியே அழைத்து செல்லும்போது அவை மக்களை தாக்கிய சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அதுபோல தெருநாய்கள் பெருகிவிட்டதால் அவை கூட்டமாக சேர்ந்து தனியாக செல்வோரை தாக்குவதும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி என பல பகுதிகளிலும் அரசு செயல்படுத்தி வருகிறது. அதுபோல சென்னையில் வளர்ப்பு நாய்களை வெளியே அழைத்து செல்லும்போது அவற்றிற்கு வாய்மூடி அணிவிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வளர்ப்பு நாய்களை வாய்மூடி போடாமல் வெளியே அழைத்துச் சென்றால் ரூ.1000 அல்லது அதற்கு மேல் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K