நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சீமானுக்கு தான் ஓட்டு, சின்னத்துக்கு இல்லை. கரும்பு விவசாயி சின்னத்துக்காக கடைசி வரை போராடினோம். சின்னத்தில் தான் விவசாயியா..? நான் நிஜத்திலேயே விவசாயிதான்.
பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பவர்களுக்கு சைக்கிள் சின்னம், குக்கர் சின்னம் கிடைத்தது போல் நானும் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் கரும்பு விவசாயி சின்னம் கிடைத்திருக்கும். தேர்தல் ஆணையம் சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் சுதந்திரமாக இயங்குவதில்லை என்பது இதன் மூலம் தெரிய வருகிறது என சீமான் ஆவேசமாக கூறினார்