எத்தனை தடைகள் வந்தாலும் எதிர்கொள்வோம்-வித்யாராணி வீரப்பன்

Sinoj

வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (22:06 IST)
எத்தனை தடைகள் வந்தாலும் எதிர்கொள்வோம். வெற்றி பெறுவோம் என்று வித்யாராணி வீரப்பன் கூறினார்.
 
மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை  கட்டங்களாக நாடு முழுவதும் நடக்கவுள்ளது. 
 
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிலையில்,  மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் ட்சி வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுதாக்கல் முடிந்து தற்போது அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
 
இந்த நிலையில்,  கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் இன்று மாவட்ட கலெக்டரும் தேர்தல்  அலுவலருமான சரயுவிடம் புகார் மனு அளித்தார்.
 
அதில், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் வேட்பாளராகிய எனக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. அதை பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் எனக்கு தொந்தரவு செய்கின்றனர்.  வேட்புமனு பரிசீலனையின்போது, எங்கள் கட்சியினர் மீது காரை ஏமாற்றுவது போல் சிலர் வந்தனர்.  நேற்று முன் தினம் எங்கள் கட்சி பொறுப்பாளர்களிடம் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மிரட்டினார்.  தேர்தல் அதிகாரிகள் எங்கள் வாகனங்களுக்குப் பின்னர் வருவதைத் தவிர வேறு எந்த வேலையும் செய்வதில்லை. போலிஸார் எங்கள் மீது வேண்டுமென்றே வழக்குப் போடுகிறார்கள். இதுகுறித்த புகார் மனுவை மாவட்ட கலெக்டர்தேர்தல் அலுவலரிடம் வழங்கியுள்ளேன் என்று கூறினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்