இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கேஸ் விலை குறைக்கப்படும்- உதயநிதி

Sinoj

வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (20:33 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல்  நடக்கவுள்ளது.  இதற்காக  அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
  
ஒவ்வொரு கட்சிகளும் மாற்று  கட்சியை தாக்கி, விமர்சித்து பிரசாரத்தில் பேசி வருகின்றனர்.
 
இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவுடன் விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. சமீபத்தில் வேட்பு மனுதாக்கல் நடைபெற்ற நிலையில், தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இன்று கும்பகோணத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர்   உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
 
அப்போது அவர் கூறியதாவது: 

கும்பகோணம் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படும். கேஸ் விலையை 10 ஆண்டுகளில் 800 ரூபாய் உயர்த்தியுள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில்  கேஸ் விலையை 800 ரூபாய் உயர்த்திவிட்டு ரூ.100 குறைத்துள்ளனர்.  இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கேஸ் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும் என்று தெரிவித்தார்.
 
மேலும், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சுங்கச் சாவடிகள் அகற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்