ஏற்கனவே ஹிந்தி மீது கடும் எதிர்ப்பை காட்டும் திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த பிரச்சினையை அரசியலாக்கி வருகின்றன. தங்களது டுவிட்டர் பக்கங்களில் உதயநிதி ஸ்டாலின், முக ஸ்டாலின் உள்பட திமுகவினர் இந்திக்கு எதிரான மீண்டுமொரு வெறியை ஏற்படுத்தி வருகின்றனர்
உண்மையில் என்ன நடந்திருக்கும்? அந்த வங்கியில் இதற்கு முன்னால் லோன் வாங்கியவர்கள் அனைவரும் ஹிந்தி தெரிந்தவர்களா? என்பதை வங்கி ஊழியர்கள் தான் விளக்கவேண்டும். ஹிந்தி தெரியாதவர் யாரும் இதுவரை அந்த லோன் வாங்கவில்லையா? மேலும் இந்த பிரச்சனை குறித்து அந்த வங்கியின் மேலாளர் உள்பட யாருமே இதுகுறித்து விளக்கமோ பேட்டியோ அளிக்காதது ஏன் என்பதும் மர்மமாக உள்ளது
எந்த ஒரு வங்கியிலும் லோன் கேட்டு வருபவர்களிடம் குறிப்பிட்ட மொழி தெரியுமா என்று இதுவரை கேட்டதாக உலக வரலாற்றிலேயே இல்லை. அதே வங்கியில் கூட ஹிந்தி தெரியாதவர்கள் பலரும் இதுவரை லோன் வாங்கி இருப்பார்கள். அவ்வாறு இருக்கும் போது அரசியல் செய்வதற்காகவே வேண்டுமென்றே ஒரு மொழிப் பிரச்சினையை கிளப்பி உள்ளது திட்டமிட்ட சதியா? என்ற சந்தேகத்தை நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது