இதனை அடுத்து இந்த கருத்தை மறுத்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், எந்த வகுப்புக்க்கும் நுழைவு தேர்வு கிடையாது என்று தெரிவித்துள்ளார். மேலும் கல்வித்துறை சார்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட உத்தரவு தவறாக வெளியிடப்பட்டு இருக்கிறது என்றும் மாணவர் சேர்க்கை குறித்த முறையான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.