இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டம்.. ஏப்ரல் 20 வரை விண்ணப்பிக்கலாம்..!

புதன், 22 பிப்ரவரி 2023 (08:05 IST)
தமிழகத்தில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் பேர் விண்ணப்பிக்கலாம் என சட்டம் கூறுகிறது. 
 
அந்த வகையில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் பயில மார்ச் 20 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
2023 - 24 ஆம் ஆண்டுக்கான 25 சதவீத இடங்களுக்கு ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் ஏழை மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
25 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஏழை மாணவர்கள் வரும் மார்ச் 20 முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்