"கமிஷன் அரசாங்கத்தை" துரத்தி விட்டு "mission அரசாங்கம்": கமல்ஹாசன் டுவீட்

திங்கள், 14 டிசம்பர் 2020 (13:33 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை நேற்று முதல் மதுரையில் தொடங்கி உள்ளார் என்பது தெரிந்ததே. அவர் மதுரைக்கு செல்லும் இடங்களிலெல்லாம் கூட்டம் அலைமோதி வருகிறது என்பதும் வரும் தேர்தலில் கமல்ஹாசன் குறிப்பிடத்தக்க வாக்குகளை பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 
 
மேலும் ரஜினியுடன் கூட்டணி, தான் போட்டியிடும் தொகுதி குறித்த அறிவிப்பு ஆகிவற்றை விரைவில் வெளியிடுவேன் என்றும் கமலஹாசன் கூறியுள்ளார். மேலும் தான் நாத்திகவாதி இல்லை என்றும் பகுத்தறிவாதி தான் என்றும் மக்களிடையே விளக்கம் அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது சில நிமிடங்களுக்கு முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் கமிஷன் அரசாங்கத்தை துரத்திவிட்டு மிஷன் அரசாங்கத்தை அமைக்க முன்வர வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
தமிழகத்தில் தொழில்முனைவோருக்கான புறச்சூழல் புதர் மண்டிக் கிடக்கிறது; இந்தக் காட்டைத் திருத்தும் முன்னத்தி ஏராக மக்கள் நீதி மய்யம் இருக்கும். "கமிஷன் அரசாங்கத்தை" துரத்தி விட்டு "mission அரசாங்கம்" அமைக்க  தொழில்முனைவோர் கரம் கோர்க்கவேண்டும்.

தமிழகத்தில் தொழில்முனைவோருக்கான புறச்சூழல் புதர் மண்டிக் கிடக்கிறது; இந்தக் காட்டைத் திருத்தும் முன்னத்தி ஏராக மக்கள் நீதி மய்யம் இருக்கும். "கமிஷன் அரசாங்கத்தை" துரத்தி விட்டு "mission அரசாங்கம்" அமைக்க தொழில்முனைவோர் கரம் கோர்க்கவேண்டும்.#சீரமைப்போம்_தமிழகத்தை

— Kamal Haasan (@ikamalhaasan) December 14, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்