தலைவி படத்திற்கு தடை இல்லை..தீபா மனு தள்ளுபடி...

வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (16:14 IST)
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை வெளியிட எந்தத்தடையும் இல்லை என செனை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள படம் படம் தலைவி.  இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர்  வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது.

நடிகை கங்கனா நடிப்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழக்கை வரலாறு தலைவி என்ற பெயரில் மூன்று மொழிகளில் உருவாகி ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருவதால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அறிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த டி2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலிதா காலமானார்.  இவரது வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட தலைவி படத்தின் கதையை பாகுபலி கதாசிரியரும் ராஜமெளலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார்.
ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசான என்னிடம் இப்படத்தை எடுக்க அனுமதி பெறவில்லை அதனால் இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டுமெனக் கோரியிருந்தார்.

இதைவிசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, தலைவி படத்திற்குத் தடைகோரி ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து, தலைவி படம் வெளியிட எந்தத்தடையும் இல்லை என உத்தரவிட்டுள்ளார்.

மேலும்,இது எனது கற்பனை என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் என நீதிபதி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்