இதற்கான தனது கட்சியின் சின்னம், கொடி, மற்றும் கொள்கைகள் அன்றைய தினம் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்நிலையில், ஹைதராபாத்தில் சந்திரசேகரராவ் அரசுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஜெகன் மோஜன் ரெட்டியின் சகோதரி ஈடுபட்டுக் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் பல்வேறு துறையில் காலிப்பணியிடஙக்ள் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு எதுவும் வெளியாகவில்லை என்று விமர்சித்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. தற்கொலை செய்து கொண்டவருக்கு ஆதரவாக ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அப்போது ஹைதரபாத் காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.