இதனையடுத்து நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக அக்டோபர் 30ந் தேதி மேல்முறையீடு செய்யப்போவதாக தினகரன் தெரிவித்திருந்தார். இதற்கிடையே சபாநாயகரும், அதிமுக கொறடாவும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்தனர். ஆனால் தினகரன் தரப்பினர் நேற்றைய தினம் மேல்முறையீடு செய்யவில்லை.
இந்நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், மேல்முறையீடு செய்யப்போவதில்லை எனவும் தேர்தலை சந்திக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 18 தொகுதிகளோடு காலியாக உள்ள 2 தொகுதிகளையும் சேர்த்து 20 தொகுதிகளிலும் அமமுக அபாரமாக வெற்றி பெறும் என்றும் இத்தேர்தலில் அதிமுக டெபாஸிட் பெறுவதே கஷ்டம் என்றும் தினகரன் தெரிவித்தார். தினகரனின் இந்த திடீர் மனமாற்றத்திற்கு என்ன காரணம் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.