”5 நாட்களுக்குள் நித்யானந்தாவை கண்டுபிடிக்க வேண்டும்”.. போலிஸாருக்கு உத்தரவு

Arun Prasath

வெள்ளி, 13 டிசம்பர் 2019 (09:11 IST)
வருகிற 18 ஆம் தேதிக்குள் நித்யானந்தாவை கண்டுபிடிக்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நித்யானந்தா மீது பாலியல் வழக்கு, கடத்தல் வழக்கு போன்ற பல வழக்குகள் போடப்பட்டுள்ளது. இதனிடையே அவரது முன்னாள் சீடரான லெனின் கருப்பன், நித்யானந்தாவுக்கு எதிராக தொடுத்த வழக்கில் நித்யானந்தா ஆஜராவதிலிருந்து விலக்கு பெற்றார்.

எனினும், நித்யானந்தா எங்கிருக்கிறார் என தெரியவில்லை என லெனின் கருப்பன் பெங்களூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நித்யானந்தா இருக்குமிடத்தை கண்டுபிடித்த அறிக்கை அளிக்க வேண்டும் என பெங்களூர் காவல் துறைக்கு உத்தரவிட்டது.

மீண்டும் இந்த வழக்கின் மீதான விசாரணை நடந்தபோது, அறிக்கை எதுவும் அளிக்கப்படவில்லை என்பதால், வருகிற 18 ஆம் தேதிக்குள் நித்யானந்தாவை கண்டுபிடித்து அறிக்கை அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் கண்டுபிடிக்காத பட்சத்தில் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்