எவ்வளவு சிகிச்சை எடுத்தும் சரியாகததால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். அவரை சோதித்து பார்த்த மருத்துவர்கள் நிபா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டதால், அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தினர்.
ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த டாக்டர்களால் ஒரு சரியான முடிவுக்கு வர முடியவில்லை. இருந்தாலும் அவரை தீவிர கண்காணிப்பு பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது இரத்த மாதிரிகளை ஆய்வுக்காக புனே தேசிய பரிசோதனை மையத்துக்கு அனுப்பியுள்ளனர். அதன் முடிவுகள் தெரிய வரும்போதுதான் நிபா வைரஸ் தமிழகத்தில் பரவி வருகிறதா என்ற கேள்விக்கு பதிலும் கிடைக்கும்.