நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்காக மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். உதகை மாவட்டத்தில் 5 இடங்களில் பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரங்கள் பொறுத்தியுள்ள அவர் அதில் பாட்டில்களை இடுபவர்களுக்கு கேஷ்பேக் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.