இரவு நேர ஊரடங்கு ரத்து, பள்ளிகள் திறக்க அனுமதி -கர்நாடக அரசு

சனி, 29 ஜனவரி 2022 (17:29 IST)
வரும் பிப்ரவரி மதம் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக  கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
 
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் கொரொனா அதிகரித்த நிலையில், கடந்தாண்டு தென்னாப்பிரிக்காவில் இருந்து ஒமிக்ரான் தொற்றுப் பரவியது.  உருமாறிய கொரொனா தொற்று இந்தியாவில் பரவலாகி வருகிறது.
 
இந்நிலையில் கர்நாடக  மாநிலத்தில் வரும் 31 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாகவும்,பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளி  கல்லூரிகளை திறக்க  மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், உணவகம், மதுபானக்கடைகளில் 100% பேருக்கு அனுமதி எனவும், திரையரங்குகளில் 50% பேருக்கு மட்டும் அனுமதி எனவும் தெரிவித்துள்ளளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்