டிஸ்சார்ஜ் எண்ணிக்கையை மிஞ்சிய கொரோனா தொற்று: இன்றை நிலவரம்...!!

வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (18:15 IST)
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,995 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது என தகவல். 
 
தமிழகத்தில் கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. அதேசமயம் தற்போது இறப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் இன்று தமிழகத்தில் 5995 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஒரே நாளில் 101 பேர் பலி, தமிழகத்தில் இன்று 5764 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் சென்னையில் இன்று 1282 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்