மீளா துயரத்தில் கேரளா: விமான விபத்தில் சிக்கிய 40 பேருக்கு கொரோனா!

சனி, 8 ஆகஸ்ட் 2020 (10:55 IST)
கோழிக்கோடு விமான விபத்தில் பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் மீட்பு பணியில் ஈடுபட்டோர் கலக்கத்தில் உள்ளனர். 
 
கொரோனா காரணமாக இப்போது சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்துக்கு வந்த ஏர் இந்தியா விமானம் தரையிரங்கும் போது பாதையில் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் விமானத்தின் முன் பக்கம் சுக்குநூறாக உடைந்தது.  
 
விமானத்தில் பயணிகள் மற்றும் விமானிகள் உள்பட 191 பேர் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. விமான விபத்தில் காயமடைந்தவர்கள் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மற்றும் அருகில் உள்ள மற்ற மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.  
 
இந்நிலையில் தற்போதையை தகவலின் படி விபத்தில் மரணமடைந்த 17 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என கேரள சுகாதாரத்துறை தகவல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 
 
அதோடு கோழிக்கோடு விமான விபத்தில் சிக்கிய  40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்ததும் பலர் அங்கு உதவிக்கு வந்ததால் இப்போது கொரோனாவால் அங்கு மேலும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்