இந்நிலையில் வரும் 18 ஆம் தேதி முதல் அதாவது நாளை முதல் சென்னையிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளதாகவும், காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் தனிமனித இடைவெளி ஆகிவற்றை கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.
சென்னையில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நேரத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவு எடுத்த தமிழக அரசுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே டிடிவி தினகரன், விடுதலைச் சிறுத்தைகள் எம்பி ரவிக்குமார், திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பலர் சென்னையில் டாஸ்மாக் திறப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி இது குறித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, பிறமாவட்ட கொரோனா பரவல் எண்ணிக்கைகளோடு சென்னையை போட்டி போட வைக்கத்தான் தமிழக அரசு சென்னையில் அவசரமாக டாஸ்மாக் கடைகளை திறக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.